த.ம.மு.க. பொதுக்கூட்டம்

புளியங்குடியில் த.ம.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-16 18:45 GMT

புளியங்குடி:

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி, அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், புளியங்குடி செல்வ விநாயகர் கோவில் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. த.ம.மு.க. மண்டல செயலாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் மாடசாமி, மாவட்ட பொருளாளர் வெள்ளத்துரை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் செந்தில் அரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் வைர மூர்த்தி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் இனத்திலிருந்து நீக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புளியங்குடியில் எலுமிச்சை குளிர்பதன சேமிப்பு கிடங்கு மற்றும் நெல் கொள்முதல் கிடங்குகள் அமைத்திட வேண்டும். செண்பகவல்லி அணைக்கட்டு திட்டத்தை விரைவில் நிறைவேற்றி தர வேண்டும், என்று கூறினார்.

மாநில துணை பொதுச்செயலாளர்கள் நெல்லையப்பன், அருண் பிரின்ஸ், சண்முகசுதாகர், மாநில மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, தலைமை நிலைய செயலாளர் சேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் காளிதாஸ், மாவட்ட இணை செயலாளர் கோபி பாண்டியன், நகர தலைவர் ராஜதுரை, நகரச் செயலாளர் ரஞ்சித் பாண்டியன், இணைச் செயலாளர்கள் பிரசாந்த், மணிகண்டன், பொருளாளர் வினோத் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கனி பாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்