திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா

திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-31 19:17 GMT

பெண்ணாடம், 

திட்டக்குடி அடுத்த எரப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த 217 பேருக்கு 1996-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த இடத்தை உரியவர்களுக்கு அளவீடு செய்து தரவில்லை. இதனால் பட்டா கிடைத்தும், இடம் கிடைக்காமல் பாதிப்படைந்த பெண்கள், திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மதியம் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், வருகிற 4-ந் தேதிக்குள் அளந்து இடம் வழங்குவதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்