திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் மாணவர் சோ்க்கைக்கான கலந்தாய்வு

திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் மாணவர் சோ்க்கைக்கான கலந்தாய்வு

Update: 2023-05-29 18:45 GMT

திருவாரூர் திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2023-24-ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்பிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு 31-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. 31-ந்தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கு கலந்தாய்வு நடக்கிறது. 1-ந்தேதி தமிழ், ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், 2-ந்தேதி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 5-ந்தேதி வணிகவியல், வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் 6-ந்தேதி கலைப்பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. மேற்கண்ட நாட்களில் நடக்க உள்ள கலந்தாய்வில் பங்கு பெற உள்ள மாணவர்கள் முதன்மை பட்டியல் மற்றும் காத்திருப்பு பட்டியல் துறைவாரியாக தகவல் பலகையில் தெரிவிக்கப்படும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட இணைய தள விண்ணப்பம், மாற்று சான்றிதழ், 10,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றின் அசல்- தலா 5 நகல் சான்றிதழ்கள், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் உரிய நேரத்திற்குள் கல்லூரிக்கு வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்