திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்

மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-12 19:15 GMT

மன்னார்குடி;

மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பூத்கமிட்டி அமைப்பது குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், நகர செயலர் ஆர்.ஜி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது மற்றும் அதற்கான கையேடுகளை வழங்கி பேசினார். மேலும் அவர், ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என கூறினார். கூட்டத்தில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் கண்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் நீடாமங்கலம் ஆதி ஜனகர், கோட்டூர் ஜீவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்