திருவண்ணாமலை: ஆதிபராசக்தி கோவிலில் கொதிக்கும் எண்ணெயில் வடை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்...!

துரிஞ்சிக்குப்பம் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் வடை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-08-01 11:34 GMT

கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில் குளக்கரையில் அருள்மிகு ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் இன்று 1-ம் தேதி ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்றது.

இதைமுன்னிட்டு நேற்ற காலையில் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இன்று காலை அம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

பிற்பகல் கொதிக்கும் எண்ணெயில் வடை எடுத்தல், மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன்,முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்து வந்து பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவித்தனர்.

இரவில் அம்மன் திருவீதி உலாவும் நாடகமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்