திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 25-ந் தேதி நடைபெறும் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 25-ந் தேதி நடைபெறும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-02-19 13:24 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் கே.இ.என்.சி அரசு மேல்நிலைப்பள்ளி மணவாளநகரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 25-02-2023 அன்று காலை 9.30 மணி முதல் நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது. குறைந்தபட்ச கல்வித் தகுதி 8,10, பிளஸ்-2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ. பட்டப்படிப்பு, ஓட்டுநர் பயிற்சி முடித்தவர்கள், டெய்லரிங் தொழில் கல்வி பயின்ற ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் உரிய வயது, கல்வி தகுதி முதலான முக்கிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருவள்ளூர். தொலைபேசி எண்: 044-27660250 என்ற முகவரிகளுக்கு தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்