திருவள்ளூரில் பா.ஜ.க. கட்சி கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு
திருவள்ளூரில் பா.ஜ.க. கட்சி கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
இந்தியா முழுவதும் நேற்று 74-வது குடியரசு தின விழாவை கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கவர்னர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலக கட்டிடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் அக்கட்சியினர் தேசிய கொடியை ஏற்றினர். கட்சி கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.