திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியே 38 லட்சம் - 24 நாட்களில் கிடைத்தது

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியே 38 லட்சம் 24 நாட்களில் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-08-28 07:47 GMT

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசித்துவிட்டு செல்கின்றனர். பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை போன்றவற்றை செலுத்துகிறார்கள். இப்படி பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம், இதேபோல் திருத்தணி முருகன் கோவிலுடன் இணைந்த 30 உபகோவில்களின் உண்டியல் பணம் அனைத்தையும் மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையரும், செயல் அலுவலருமான விஜயா முன்னிலையில் கோவில் பணியாளர்களை கொண்டு எண்ணப்பட்டது.

இதில் கடந்த 24 நாட்களில் மட்டும் பக்தர்கள் காணிக்கையாக ரூ.1 கோடியே 38 லட்சத்து 93 ஆயிரத்து 359 வசூலாகி உள்ளது. மேலும் 320 கிராம் தங்கம், 11 ஆயிரத்து 480 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்