தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவல நிலை - எடப்பாடி பழனிசாமி

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது.;

Update:2024-11-25 15:22 IST

கோப்புப்படம் 

சென்னை,

பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 25-ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம். தி.மு.க. ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதற்கான விடியல் இன்றுவரை கிடைத்த பாடில்லை.

பெண்கள் முன்னேற்றம்தான் சமுதாய முன்னேற்றம் என்பதை உணர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மு.க. ஸ்டாலினின் தி.மு.க. அரசை இத்தருணத்தில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்