திருப்புளியங்குடிகாய்சினிவேந்த பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா

திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update: 2023-03-15 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான காய்சினிவேந்தப் பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது.

தொடர்ந்து சயனகுரடு மண்டபத்தில் உற்சவர் பொலிந்து நின்றபிரான் தாயார்களுடன் எழுந்தருளினார். கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. மார்ச். 21-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்களும், கோவில் நிர்வாகத்தினரும் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்