திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி

வந்தவாசியில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது.

Update: 2023-01-01 12:06 GMT

வந்தவாசி

மார்கழி மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் வந்தவாசி சன்னதித்தெருவில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் நடைபெற்றது.

கல்வியாளர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சம்பத், சுப்பராயலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் எஸ்.குமார், திருமலை திருப்பதி தேவஸ்தான திருப்பாவை சொற்பொழிவாளர் பி.எஸ்.கோவிந்தராஜன் ராமானுஜதாசர் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இதனைெயாட்டி மாணவ-மாணவிகளின் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்று, அனைவருக்கும் பரிசுகளும், நோட்டுப் புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முடிவில் பஜனை கோவில் நிர்வாகி பரந்தாம ராமானுஜ தாசர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்