வெற்றி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் பூமிபூஜையுடன் தொடக்கம்
திருச்சி கருமண்டபம் வெற்றி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் பூமிபூஜையுடன் தொடங்கியது
திருச்சி கருமண்டபம் வசந்த் நகர், ஜெயநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதன் மூலம் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். இங்கு மண்டப விரிவாக்கத் திருப்பணி தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.