மாயூரநாதர் கோவிலில் திருப்பணிகள்

மாயூரநாதர் கோவிலில் திருப்பணிகள்;

Update: 2023-07-07 18:45 GMT

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை திருவாவடுதுறை ஆதீனம் நேற்று பார்வையிட்டார்.

மாயூரநாதர் கோவில்

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 3-ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி கோவில் திருப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு விழாவையொட்டி மாயூரநாதர் மற்றும் அபயாம்பிகை அம்மனுக்கு 33 குண்டங்களுடன் உத்தம பட்ச யாகசாலை அமைத்து வேள்வி நடைபெறவுள்ளது.

திருவாவடுதுறை ஆதீனம் பார்வையிட்டார்

இந்தநிலையில் கோவிலில் நடந்து வரும் திருப்பணிகள் மற்றும் யாகசாலை அமைப்பதற்கான இடத்தை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் மயிலாடுதுறை மாயூரநாதசுவாமி கோவிலுக்கு சென்று பார்வையிட்டார்.

முன்னதாக அவர் மாயூரநாதர், அபயாம்பிகை சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். அப்போது ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், சிவபுரம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியர், கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்