திருப்பாலை, வண்டியூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக திருப்பாலை, வண்டியூர் பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும்.

Update: 2023-10-12 19:47 GMT

.

பராமரிப்பு பணி

மதுரை திருப்பாலை, மகாத்மாகாந்தி நகர், வண்டியூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி திருப்பாலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், பி.டி. காலனி, பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், டி.டபிள்யூ.ஏ.டி. காலனி, செட்டிகுளம், சண்முகா நகர், விஜய் நகர், கலைநகரின் ஒரு சில பகுதிகள், மீனாட்சி நகர், இ.பி.காலனி, சூர்யா நகர், மீனாட்சியம்மன் நகர் 1 முதல் 11-வது தெரு, வி.கே.சாமி நகர், மங்களகுடி, மருதங்குளம், சந்தோஷ் நகர், சிறுதூர், சக்கிலியாங்குளம், சஞ்சை நகர், கணபதி நகர், அழகர்கோவில் மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

வண்டியூர்

மகாத்மாகாந்தி நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பொதிகை நகர், தார்காடு, கீழ பனங்காடி, மேல பனங்காடி, சேதுபதிநகர், செந்தூர் நகர், அப்துல்கலாம் காலனி, சுகந்தி நகர், அன்பு நகர், குலமங்களம் ரோடு, ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

வண்டியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வண்டியூர், பி.கே.எம். நகர், சவுராஸ்ட்ராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜுப்லி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்