பாபநாசம் வீரமகாகாளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா
பாபநாசம் வீரமகாகாளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா;
பாபநாசம் 108 சிவாலயம் வங்காரம்பேட்டை வீரமகாகாளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி ஹோமம், அக்னி எல்லை வலம் வருதல், கரகம், காவடி, பால்குடம், கஞ்சிவார்த்தல், காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து துர்க்கை அம்மன் எல்லை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. வீர மகாகாளியம்மன் படுகளம் பார்த்து வீதி உலா வந்து திருநடன திருவிழா முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பின்னர் வீரமகாகாளியம்மன் சன்னதியை வந்து அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.