திருமுடி சாஸ்தா அய்யனார் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

பொறையாறு திருமுடி சாஸ்தா அய்யனார் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-05-12 18:45 GMT

பொறையாறு:

பொறையாறு திருமுடி சாஸ்தா அய்யனார் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் பழமைவாய்ந்த திருமுடி சாஸ்தா அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக திருமுடி மகா சாஸ்தா அய்யனார், பூரணை மற்றும் புஷ்கலை ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். பின்னர் சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

வடம் பிடிக்கும் நிகழ்ச்சி

இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்து. இதில் பரம்பரை அறங்காவலர்கள் டி.ஜி.ஆர் ஜெயக்குமார் நாடார், ஆர்.என். ரூபேஷ் நாடார், நிர்வாகிகள் ஜி.வெள்ளையன் நாடார், ஜெ.விஜயாலயன் ஜெயக்குமார் நாடார், கோவில் ஆய்வாளர் பத்ரி நாராயணன் மற்றும் பொறையாறு நாடார் எஸ்டேட் குடும்பத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

உதிரவாய் துடைத்தல்

இன்று (சனிக்கிழமை) கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உதிரவாய் துடைத்தல் நிகழ்ச்சியும், 20-ந்தேதி (சனிக்கிழமை) காப்பு களைதல் மற்றும் சாமி வீதி உலாவும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்