திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா

தேவலாபுரத்தில் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நடைபெற்றது.

Update: 2023-06-08 17:28 GMT

ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தில் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோவிலில் 93-ம் ஆண்டு சிரசு திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தும், 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று அம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது. தாரை, தப்பட்டை, சிலம்பாட்டத்துடன் அம்மன் சிரசு கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

திருவிழாவை முன்னிட்டு உமராபாத் போலீசார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்