நவநீதகோபாலகிருஷ்ணசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மேக்களூர் ருக்மணி, சத்யபாமா சமேத நவநீதகோபாலகிருஷ்ணசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

Update: 2022-06-20 19:18 GMT


கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள மேக்களூரில் பிரசித்திப் பெற்ற ருக்மணி, சத்யபாமா சமேத நவநீத கோபாலகிருஷ்ணசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதையொட்டி மதியம் 2 மணிக்குமேல் ருக்மணி, சத்யபாமா சமேத நவநீதகோபாலகிருஷ்ணசாமிக்கு பலவகையான சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் ஊஞ்சல் சேவை, உய்யாளி சேவை, மாலைமாற்று நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு மங்கள வாத்தியங்கள் இசைக்க ருக்மணி, சத்யபாமா சமேத நவநீதகோபாலகிருஷ்ணசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை, வேதநாதகீத சமர்ப்பணை நடந்தது.

திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்ேகற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பக்த சேவா சங்கத்தினர் செய்திருந்தனர். முன்னதாக மேக்களூரில் உள்ள முதியோர் இல்லத்தில் பக்த சேவா சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டமும், குடும்ப விழாவும் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்