திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
நீடாமங்கலத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி பிரம்மோற்சவம் அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் திரவுபதியம்மன், அர்ச்சுணன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 24-ந்தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜசேகரன் மற்றும் அறங்காவலர்கள் விஸ்வநாதன், குணசேகரன், ராஜாராமன், ராஜன்ரமேஷ், சரவணன், பூங்குழலி ஆகியோர் செய்துள்ளனர்.