நீலமேக பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
குளித்தலை நீலமேக பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
குளித்தலையில் உள்ள நீலமேக பெருமாள் கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மூலவருக்கு திருமஞ்சனம், ராம நாம ஜபம், பாராயணம், விசேஷ ஆராதனை நடைபெற்றது. மாலை அனுமந்த வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோவில் வளாகத்திற்குள்ளேயே சாமி புறப்பாடு நடைபெற்றது. இதனை அடுத்து நேற்று சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் குளித்தலை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம், திருமஞ்சனம் மற்றும் வடமாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.