அரியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
அரியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
லால்குடி அருகே அரியூரில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பெருமாளும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்டு திருமண மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் திருமணம் நடைபெற்றது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு மாலையுடன் சென்று, இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இதனால் இந்த நிகழ்ச்சியில் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியூர் கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.