திருச்செந்தூர்ஆதித்தனார் கல்லூரியில் கருத்தரங்கம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2023-02-22 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சம வாய்ப்பு மையம் சார்பில் நேற்று "மன அழுத்தம் மேலாண்மை" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மற்றும் சம வாய்ப்பு மையத்தின் தலைவர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். சம வாய்ப்பு மையத்தின் ஆலோசகர் ராமஜெயலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். விலங்கியல் துறை உதவி பேராசிரியை ஆரோக்கிய மேரி பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியின் உளவியல் துறை உதவி பேராசிரியை வசந்தி வினோலியா சிறப்புரையாற்றி மன அழுத்தத்தின் அறிகுறிகள் மற்றும் மாஸ்லோவின் மன அழுத்த கோட்பாட்டின் 7 விதிகளை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். மாணவ-மாணவிகள் எழுப்பிய உளவியல் சார்ந்த கேள்விகளுக்கு மிகவும் பொருத்தமான வகையில் பதில்களை வழங்கினார். இந்த கருத்தரங்கில் முதுகலை 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

கருத்தரங்கு முடிவில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை முனீஸ்வரி நன்றி கூறினார். கருத்தரங்கில் முனைவர் பாலு, வேலாயுதம், பாகீரதி, கவிதா, ரமா தேவி, மோதிலால் தினேஷ், ராஜ் பினோ மற்றும் பேராசிரியை சாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்