திருச்செந்தூர் காஞ்சி சங்கரா பள்ளி மாணவர்கள் சாதனை
திருச்செந்தூர் காஞ்சி சங்கரா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற 9 பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். போட்டியில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் ராமமூர்த்தி, முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.