திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் அகதர உறுதி குழு கூட்டம்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் அகதர உறுதி குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-09-27 05:30 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் அகதர உறுதி குழு சார்பில், தேசிய மதிப்பீடு மற்றும் தர சான்று சிறப்புரை கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். உதவி பேராசிரியர் நெல்சன் துரை அறிமுக உரையாற்றினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார்.

சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.சுந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரியாக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி திகழ்கிறது. இங்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள், உள்விளையாட்டு அரங்கம் இருப்பதுடன், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு பயின்ற மாணவர்கள் இந்தியாவில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், விளையாட்டு ஆணையங்களிலும் அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். இதுபோன்று ஏராளமான மாணவர்கள் உருவாக வேண்டும்'' என்றார்.

தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக்கழக மருத்துவ அதிகாரி டாக்டர் முருகவளவன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இணை பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்