திருச்செந்தூர்ஆதித்தனார் கல்லூரியில் இயற்பியல்துறை மாநில கருத்தரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயற்பியல்துறை மாநில கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில், "பொருண்ம அறிவியல்" என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை உரையாற்றினார். இயற்பியல் துறை தலைவர் பாலு வரவேற்றார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் சுந்தரக் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, "ஆற்றல் சேமிப்பு பயன்பாட்டிற்கான பெரோ எலக்ட்ரிக் பொருட்கள்" என்ற தலைப்பில் பேசினார். பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் தீபா "பயோமெட்டீரியல்களில் வளர்ந்து வரும் போக்குகளின் கண்ணோட்டம்" என்ற தலைப்பில் பேசினார். கருத்தரங்கிற்கு முனைவர் ஸ்ரீதேவி, அமைப்புச் செயலராக செயல்பட்டார். முடிவில் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேகர் நன்றி கூறினார்.
கருத்தரங்கில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவிகள், வாவு வகிஜா கல்லூரி மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செல்வராஜன், வாசுகி, லிங்கேஸ்வரி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.