திருச்செந்தூர் கோவில் கடற்கரையில்திண்டுக்கல் பெண் தற்கொலை முயற்சி

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் திண்டுக்கல் பெண் தற்கொலை முயற்சி செய்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2023-09-27 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை, கடல் பக்தர்கள் பாதுகாப்பு குழுவினர் மீட்டு கோவில் மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கோவில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திண்டுக்கலை சேர்ந்த கிருஷ்ணவேணி (வயது 40). இவர் குடும்ப தகராறில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்