திருச்செந்தூர் நாடார் தெரு சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழா
திருச்செந்தூர் நாடார் தெரு சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நாடார் தெரு சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
சந்தணமாரி அம்மன் கோவில்
திருச்செந்தூர் நாடார் தெரு சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 7 தேதி தொடங்கியது. அன்று இரவு ஜெய விநாயகர்க்கும், சந்தணமாரி அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஜெய விநாயகருக்கும், சந்தணமாரி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமாகி தீபாரானை நடந்தது.
பால்குடம் ஊர்வலம்
கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 9.45 மணிக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பால்குடம் எடுத்த பக்தர்கள் கோவில் முன்பு இருந்து புறப்பட்டு ஊர்வலமாக முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சந்தணமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாரானை நடந்தது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு முளைப்பாரி வீதி உலா நடந்தது. இரவு 12 மணிக்கு சந்தணமாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. கொடை விழா காலங்களில் பக்தர்களுக்கு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
கலந்து கொண்டவர்கள்
கொடை விழாவில், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, கவுன்சிலர் தினேஷ் கிருஷ்ணா, மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ராஜபாண்டி, வக்கீல்கள் சந்திரசேகரன், குருராமன், திருச்செந்தூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகாலிங்கம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மகாலிங்கம், திருச்செந்தூர் நாடார் தெரு இளைஞரணி தலைவர் சந்திரசேகர ஆதித்தன், தொழிலதிபர்கள் தங்கராஜ் நாடார், பி.பி.கார்த்திசன் நாடார், பி.பி.பட்டுராஜன், கே.பூவாசகனி, பி.சசிகலா, எஸ்.முரளி, காஞ்சனா, கே.ராஜரத்தினம், கே.பாலகிருஷ்ணன், கே.பாலசுப்பிரமணியன், கே.கார்த்திகேயன், எஸ்.வி.ராஜா, அ.விஜயரதன், கோபி சண்முகவேல் நாடார், பூமிநாதன், பி.சந்தன ராஜா, பி.சந்தான பிரபு, செங்கல்பட்டு மாவட்ட சமத்து மக்கள் கழக செயலாளர் பழனி முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மஞ்சள் நீராட்டு
இன்று அதிகாலை 5 மணிக்கு படைப்பு பூஜை தீபாராதனைக்கு பின்னர் அன்னதானம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் கும்பம் வீதி உலாவும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி கடலில் பிரி செலுத்துதலும் நடக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாரானை நடக்கிறது. விழா நாட்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் திரைபட மெல்லிசை கச்சேரி, வில்லிசை, கரகாட்டம், இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் பாஸ்கர், செயலாளர் நடராஜன், பொருளாளர் சரவணன், துணைத்தலைவர் தனசேகரன், துணை செயலாளர் சுந்தரேசன், கணக்காளர் பிரபு, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செல்வ முருகன், செந்தில் ஆறுமுகம், அமிர்த குண விநாயகம், ராஜேஷ் கண்ணன், கணேசன், சுரேஷ், விக்னேஷ், அஜெய், சுபாஷ் முரளி ஆகியோர் செய்திருந்தனர்.