திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க14-வதுஆண்டு தொடக்க விழா
திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க 14-வதுஆண்டு தொடக்க விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க 14-வது ஆண்டு தொடக்க விழா குறிஞ்சி மஹாலில் நடந்தது. விழாவிற்கு நிறுவன தலைவர் காமராசு நாடார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் செல்வகுமார் வரவேற்று பேசினார். பொருளாளர் செல்வின் நாடார் ஆண்டு அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை செயலாளர் யாபேஷ், தொகுதி செயலாளர் ஜாண், நாடார் வியாபாரிகள் சங்க துணை தலைவர்கள் அழகேசன், பார்த்தீபன், ஆலோசகர்கள் குருநாதன், தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறுமுகநேரி நகர காமராஜ் மன்ற தலைவர் சோழர் செல்வின், சண்முக பார்த்திபன், அரசு வக்கீல் பாரி கண்ணன், வக்கீல்கள் ஜேசுராஜ், எட்வர்டு ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் நிறுவன தலைவர் காமராசு நாடாருக்கு கருப்பு வைரம் என்ற பட்டம் வழங்கப்பட்டது. குலுக்கல் முறையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரிட்ஜ், பேன், குக்கர், ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் முதலில் வந்த 30 உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், திருச்செந்தூரில் புதிதாக திறக்கப்பட்ட தினசரி சந்தையில் 23 வருடங்களாக வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கே முன்னுரிமை வழங்கி ஏலம் இல்லாமல் அல்லது கட்டணம் நிர்ணயித்து கடைகள் வழங்க வேண்டும்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் உள்ளுர் மக்கள் சாமி தரிசனம் செய்ய இலவசமாக, தனி வரிசை அமைக்க வேண்டும். வந்தே பாரத் ரெயிலுக்கு திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் மற்றும் வணிகர்கள் நலனுக்காக இணைப்பு ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மத்திய அரசு சி.பா.ஆதித்தனார் விமான நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர் பால்வண்ணன் நன்றி கூறினார்.