திருச்செந்தூர் அமலிநகரில்தூண்டில் வளைவு அமைக்கக்கோரிமீனவர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்

திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் மீண்டும் வேலைநிறுத்தம் தொடங்கினர்.

Update: 2023-08-07 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் வேலைநிறுத்தம்

திருச்செந்தூர் அமலிநகரில் சுமார் ஆயிரம் மீனவ குடும்பங்கள் உள்ளது. இவர்கள் 200 நாட்டு படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் திடீரென்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து படகுகளும் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

தூண்டில் வளைவு

இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து மீனவர்கள் கூறியதாவது:-

இங்கு கடல் சீற்றத்தின் காரணமாக மண் அரிப்பு ஏற்படுவதால் மீன்பிடி தொழிலுக்கு சென்று விட்டு கரையில் படகுகளை நிறுத்துவதற்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் இங்கு தூண்டில் வளைவு பாலம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த கோரிக்கைைய வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து கடந்த ஆண்டு சட்டமன்ற மீன்வள மானிய கோரிக்கையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை.

கருப்பு கொடி காட்டுவோம்

எனவே, உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 18-ந் தேதி ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் மீனவர்கள் மாநாட்டை புறக்கணித்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்