நெல்லையப்பர் கோவிலில் தீர்த்தவாரி
நெல்லையப்பர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.;
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விநாயகர், முருகர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் பக்தர்களால் ரதவீதிகளில் இழுக்கப்பட்டது.
தேரோட்டம் முடிவடைந்த மறுநாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி சப்தாவர்ண பல்லக்கில் சுவாமி, அம்பாள் வீதிஉலா சென்றனர். பின்னர் கோவில் உள்ளே இருக்கும் பொற்றாமரை குளத்தின் கரையில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவர், அஸ்திரதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.