ரெட்டிச்சாவடியில் டிப்பர் லாரி-பஸ் மோதல்; 13 பேர் காயம்

ரெட்டிச்சாவடியில் டிப்பர் லாரி, பஸ் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-12-01 18:45 GMT


ரெட்டிச்சாவடி, 

திண்டிவனத்தில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு புதுச்சேரி வழியாக கடலூருக்கு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை செஞ்சியை சேர்ந்த சிவா (வயது 26) என்பவர் ஓட்டினார். ரெட்டிச்சாவடி மலட்டாற்று பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்ற டிப்பர் லாரியை அதன் டிரைவர் திடீரென பிரேக்போட்டு நிறுத்தினார். இதனால் அந்த மினி லாரியின் பின்பகுதியில் தனியார் பஸ் மோதியது. இந்த விபத்தில், பஸ்சில் வந்த முருகேசன் (வயது 50), கலைவாணி(36), சுகுணா(20), மாரியம்மாள்(33), மணிமாறன்(50), பிருந்தாவதி(65), மோகன்(39), விஜயலட்சுமி(49), சக்திவேல்(47), ராஜேந்திரன்(58), பார்த்திபன்(35), முருகானந்தம்(42), தாயம்மாள்(40) ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்