திண்டிவனம்திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-05-03 18:45 GMT


திண்டிவனம்

திண்டிவனத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதை தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பஞ்ச மூர்த்திகள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், காமதேனு, வளக்கால் விமானம், ரிஷபம், யானை என்று வெவ்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்

நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் வீதிஉலா வந்து அருள்பாலித்தனர். விழாவில் சிகர திருவிழாவான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.

இதையொட்டி, மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில், தேரில் எழுந்தருளினார். தேருக்கு ராதா குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பக்தர்கள் வெள்ளத்தில் வந்த தேர்

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்கள் வெள்ளத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை வந்தடைந்தது.

விழாவில் வக்கீல் தீனதயாளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், அ.தி.மு.க. கவுன்சிலர் சரவணன், பி.ஆர். சுப்பிரமணி செட்டி ஜவுளி கடை உரிமையாளர் ரங்கமன்னார் செட்டியார், ராம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் தியாகராஜன் செட்டியார், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வெங்கடேசன், கே. எஸ். பி. ஜவுளி ரெடிமேட்ஸ் உரிமையாளர் தினகரன் செட்டியார், கார்த்திக் ஸ்டுடியோஉரிமையாளர் வக்கீல்கார்த்திக், ஓம் சக்தி ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர் சக்திவேல், அப்பர் சுவாமி உழவார பணி குழுத் தலைவர் ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் டி. கே. குமார், சாம்ராஜ் லேப் உரிமையாளர் சம்பத், பால்பாண்டியன் பாத்திரக்கடை உரிமையாளர் ரமேஷ், பி. என். ஆர். லட்சுமிசில்க்ஸ் உரிமையாளர் நாராயணன் ரெட்டியார், கே.ஆர். எஸ். பில்டர்ஸ் உரிமையாளர்சுப்பராயலு உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சூரிய நாராயணன், ஆய்வாளர் தினேஷ், கணக்காளர் சங்கர், உபயதாரர்கள் உள்பட பலர் செய்திருந்தனர்.

தீர்த்தவாரி

விழாவில் இன்று(வியாழக்கிழமை) தீர்த்தவாரியும், நாளை (வெள்ளிக்கிழமை) விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. முன்னதாக திண்டிவனம்நகரம் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா மேற்பார்வையில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்