விவசாயிகளுக்கு உழவு எந்திரம்

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு உழவு எந்திரம்: மாவட்ட ஊராட்சி தலைவர் வழங்கினாா்

Update: 2023-09-05 18:45 GMT

மன்னார்குடி:

வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் மூலம் பவர்டில்லர் வழங்கும் நிகழ்ச்சி மன்னார்குடி வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னார்குடி நகர சபை தலைவர் மன்னை சோழராஜன், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தலையாமங்கலம் பாலு தலைமை தாங்கி மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 63 விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய பவர்டில்லரை வழங்கினார். விழாவில் நகரசபை துணைத் தலைவர் கைலாசம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தன்ராஜ், உதவி செயற்பொறியாளர் முருகதாஸ், உதவி பொறியாளர் அட்சயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்