ஊட்டி சாலையில் புலி நடமாட்டம்.. வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்த புலியை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்தனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து பைகாரா செல்லும் சாலையில், கிளன்மார்கன் பகுதியில் புலி ஒன்று சாலையில் பட்டப்பகலில் ஒய்யாரமாக நடந்து வந்துள்ளது. இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்தனர்.
இந்தக் காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. மேலும், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே பயணம் செய்து வருகின்றனர்.