தியாகராஜபாகவதர் நினைவு தினம்

தியாகராஜபாகவதர் நினைவு தினம் நடைபெற்றது.

Update: 2022-11-01 20:32 GMT

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தியாகராஜ பாகவதர். இவர் திருச்சியில் பிறந்தவர். இவரது நினைவிடம் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ளது. நேற்று அவரது நினைவு தினத்தையொட்டி அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி திருச்சியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதேபோல் பல்வேறு அமைப்பினரும் தியாகராஜ பாகவதர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்