தியாகராஜ பாகவதர் நினைவு தினம்
உடன்குடியில் தியாகராஜ பாகவதர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.;
உடன்குடி:
உடன்குடியில் விஸ்வ பிரம்ம திருப்பணிக்குழு, தமிழ்நாடு விஸ்வகர்ம காயத்ரி தேவி சேவார்த்திகள் சங்கம் சார்பில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 62-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. உடன்குடி பஜாரில் தியாகராஜ பாகவதரின் ஊருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. வானுமாமலை தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் வேல்முருகன், சுப்பையா, கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார், சண்முகம், பாலகிருஷ்ணன், சிவக்குமார், மந்திரம், வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.