தூய கித்தேரியம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம்

மேல ஆத்தூர் அருகே கொழுவைநல்லூர் தூய கித்தேரியம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-09-02 18:45 GMT

ஆறுமுகநேரி:

மேல ஆத்தூர் பஞ்சாயத்து பகுதியான கொழுவைநல்லூர் தூய கித்தேரியம்மாள் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஜெபமாலை நடைபெற்றது. 7 மணிக்கு முன்னாள் கொம்புத்துறை பங்குத்தந்தையும், தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் அருட் பணியாற்றும் விக்டர் லோபோ அடிகளார் கொடியேற்றி திருவிழா திருப்பலியை நிறைவேற்றினார். சேர்ந்தபூமங்கலம் பங்குத்தந்தை செல்வன் பெர்னாண்டோ அடிகளார் மறையுரை நிகழ்த்தினார்.

விழாவை முன்னிட்டு 10 நாட்களும் மாலை ஆராதனை, மறையுரை நடக்கிறது. 9-ந் தேதி மாலையில் திருவிழா மாலை ஆராதனையும், தொடர்ந்து சப்பர பவனியும் நடைபெறுகிறது. 10-ந் தேதி காலையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும், தொடர்ந்து கித்தேரியம்மாள் தேர் பவனியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சேர்ந்தபூமங்கலம் பங்குத்தந்தை மற்றும் கொழுவைநல்லூர் ஆலய கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஸ்டீபன், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்