4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-09-13 19:55 GMT

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக சுப்பையா (வயது 54) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாப்பாக்குடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் லண்டன்துரை என்ற குட்டி (22), சுடலை மணி (23), மாரியப்பன் (48) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அவர், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இந்த உத்தரவு நகலை அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

இதேபோல் பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த தேவேந்திரன் மகன் ஆசைத்தம்பி (26). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். இவரும் கலெக்டர் உத்தரவுபடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்