வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தாழையூத்தில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி மாவட்டம் சிங்கத்தாகுறிச்சியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சுடலைமுத்து என்ற ராஜா (வயது 23). இவர் தாழையூத்து போலீஸ் நிலைய பகுதியில் அடிதடி, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக தாழையூத்து போலீசார் இவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், தாழையூத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று சுடலைமுத்துவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுடலைமுத்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நகல், பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் நேற்று வழங்கப்பட்டது.