வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-05-16 20:17 GMT

நெல்லை மாவட்டம் தாழையூத்து ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் இசக்கிமுத்து என்ற ராஜா (வயது 29). இவரை தாழையூத்து போலீசார் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று இசக்கிமுத்து என்ற ராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதற்கான உத்தரவை தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மதுரை மத்திய சிறையில் நேற்று வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்