வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை பாளையஞ்செட்டிக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் கிருஷ்ணகுமார் (வயது 30). இவர் பாளையங்கோட்டை போலீசாரால் கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். அதை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் ஏற்று கிருஷ்ணகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.