வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஊத்துமலை அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-08-17 16:43 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை கிராமத்தை சேர்ந்தவர் முருகசேன் (வயது 58). சத்துணவு அமைப்பாளரான இவர் கடந்த மாதம் 16-ந் தேதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராணத்தை சேர்ந்த செல்வமுருகனை (30) கைது செய்தனர்.

இந்தநிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பரிந்துரைத்தார். இதனை கலெக்டர் ஆகாஷ் ஏற்று செல்வமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், குண்டர் சட்டத்தில் செல்வமுருகனை கைது செய்து, அதற்கான ஆவணங்களை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்