வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி போலீஸ் நிலைய பகுதியில் அடிதடி, கொலை மிரட்டலில் ஈடுபட்டதாக சுத்தமல்லி சத்யாநகரை சேர்ந்த பிரதீப் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று பிரதீப்பை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.