அரசுபஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
கருங்கல் அருகே அரசுபஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
கருங்கல்,
கருங்கலில் இருந்து குலசேகரம் நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கருங்கல் அருகே பரமானந்தபுரம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அந்த பஸ் மீது கற்களை வீசி விட்டு தப்பிச் சென்றார். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் ராஜ்குமார் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பஸ் மீது கற்களை வீசியது கருங்கல் அருகே கோவில்விளையைச் சேர்ந்த டேவிட்ராஜ் (வயது34) என்பதும், அவர் குடிபோதையில் கற்களை வீசியதும் தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.