பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் ஆயத்த ஆடைகள் உற்பத்திக்கு நிதி உதவி

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் ஆயத்த ஆடைகள் உற்பத்திக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்

Update: 2022-09-13 17:01 GMT

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கேற்பவும், 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, தேனி மாவட்டத்தில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தகுதியான குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை www.theni.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 20-ந்தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்