கார் மோதி பெண் உள்பட 3 பேர் படுகாயம்

ராஜபாளையம் அருகே கார் மோதி பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-05-29 19:36 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி கார்த்திக் நகர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 41). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். ஆகையால் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக காரில் அவரது மனைவி அஜிதா (36) என்பவருடன் ஆவாரம்பட்டி வழியாக சென்றுள்ளார். அப்போது முனீஸ்வரன் கோவில் பகுதியில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதேநேரம் பின்னால் வந்த கார் அஜிதா மற்றும் அப்பகுதியில் தள்ளுவண்டியில் அமர்ந்திருந்த சுப்புராயன் ( 74), சண்முகவேல் (81) ஆகியோர் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

Tags:    

மேலும் செய்திகள்