ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா
குடியாத்தத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சரக ஓய்வுபெற்ற ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் 70 வயது மூத்த ஆசிரியர்கள், 80 வயது மூத்த ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தலைவர் டி.எஸ்.ஜோதி தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.ராஜசேகரன் வரவேற்றார்.
விழாவில் குடியாத்தம் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் பி.சேகர், கருவூல அலுவலர்கள் என்.டி.துரைமுருகன், வி.ரகுராமன், வட்டார கல்வி அலுவலர்கள் கே.உஷாராணி, என்.பி.கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சங்க நிர்வாகிகள் பிச்சாண்டி, கணேசன், தங்கராஜ், ஜோதி, ராமரத்தினம், சுகுணாதேவி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் 70 மற்றும் 80 வயதுக்கு மேல் உள்ள மூத்த ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்னர். இதில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் டி. கண்ணதாசன் நன்றி கூறினார்.