முப்பெரும் விழா
வீரவநல்லூரில் காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா நடந்தது;
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் நகர காங்கிரஸ் சார்பில், காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள் மற்றும் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் கனகசபாபதி, பொருளாளர் சொரிமுத்து, நகர பொதுச்செயலாளர் முப்பிடாதி, ஐ.என்.டி.யு.சி. துணைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் கணபதி, நகர செயலாளர் திருநாவுக்கரசு, ஐ.என்.டி.யு.சி. துணைச்செயலாளர் சண்முகவேல், சிறுபான்மை பிரிவு ஜெபக்குமார், பீர் மைதீன் மற்றும் வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஐ.என்.டி.யு.சி.செயலாளர் ரவி நன்றி கூறினார்.