சுரண்டையில் முப்பெரும் விழா

சுரண்டையில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2023-08-17 19:20 GMT

சுரண்டை:

சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில், புதிய நிர்வாகிகள் அறிவிப்பு விழா, நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலரும், மாவட்ட காங்கிரஸ் பொருளாளருமான முரளி ராஜா, சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளி முருகன், சகோதரி சண்முகசுந்தரம், ஏ.கே.எஸ்.சேர்மச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமனச் சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து நலத்திட்ட உதவி வழங்கி பேசினார்.

காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், சமுத்திர கொத்தனார், பால்துரை, தேவேந்திரன், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், பழனி நாடார் எம்.எல்.ஏ. கொடுத்த கோரிக்கை மனுவில், ஆலங்குளம் யூனியன் ஊத்துமலையில் பழுதடைந்துள்ள அரசு கிராம சித்த மருந்தகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும். ஊத்துமலை மற்றும் வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். சுரண்டை நகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அல்லாத மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். தென்காசி மாவட்டத்தில் அடுத்த ஆண்டில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்