சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது

சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-29 20:15 GMT

சேலம்:

சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

சேலம் அருகே உள்ள கருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அதிகாலை கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பழைய காலனி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் சேலம் சாமிநாயக்கன்பட்டியை ராமஜெயம் (வயது 50), உடையாப்பட்டியை சேர்ந்த தீபன்ராஜ் (23), சுதர்சன் (23) என்பது தெரிந்தது. மேலும் வேனில் சோதனை நடத்திய போது அதில் மூட்டை, மூட்டையாக 2 டன் ரேஷன் அரிசி இருப்பதும் அதை கடத்த முயன்றதும் தெரிந்தது.

பறிமுதல் செய்தனர்

இதையடுத்து 3 பேரையும்கைது செய்து ரேஷன் அரிசி, வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் கூறும் போது ஓமலூர், தீவட்டிப்பட்டி, கருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதை பெங்களூருவுக்கு கடத்த முயன்ற போது 3 பேரையும் பிடித்து கைது செய்து உள்ளோம் என்று கூறினர்.சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது

Tags:    

மேலும் செய்திகள்